நீர் அணிந்த ஆடை கூட நடிக்கும்!..
உமைத்தொட்ட காற்றும் பேசி நடிக்கும்.
உமை நோக்கி ஒளியுமிழும் விளக்கு நடிக்கும்.
நெற்றியாடும் சுருள் முடியும் மெல்ல நடிக்கும்.
கலைக்குரிசில் பாதம்பட்ட தரை நடிக்கும்.
திரையரங்கம் போர்த்திநிற்கும் கூரை நடிக்கும்.
கலா ரசிகன் அமர்ந்து ரசிக்கும் நாற்காலியின்
கால் நடிக்கும்,கை நடிக்கும்,திரையில் விழும்
இடைவேளை என்கின்ற எழுத்து நடிக்கும்.
அது முடிய ஒலிக்கின்ற மணியும் நடிக்கும்!
நரை தடவி நீர்வந்து நின்றபோது....
இருபதிலும் என் முடிகள் நரைக்கக் கண்டேன்....
உயிர்வரைபடங்கள் தமிழினில் நீர் வரைந்தபோது
இரை மறந்து திரையரங்கில் தமிழ் குடித்தேன்.
குறைகாண முடியா நிறை நடிப்பில்....
இந்தக்குவலயத்தில் உமைப்போல
எவர்தான் உண்டு ?...
'திருவிளையாடல்' திரைப் படத்தில் ஓர் சிலிர்ப்புக் காட்சி...
கம்பீரமும் அலட்சியமும் காலில் மின்ன...
கடற்கரையோரம் மிடுக்காக நெஞ்சுயர்த்தி...
நீர்திரை கிழிய நடை போட்ட காட்சி கண்டு
விரல் கிழிய விசிலடித்தேன்...வியந்து நின்றேன்!...
'கந்தன் கருணை' படத்தில் அந்த நடையைப் பார்த்து
என் கந்தர்மடம் வரும் வரைக்கும்
சொந்த நடை மறந்தேன் ஐயா...
'திருஅருட்செல்வர்' படத்தினிலே பெரும் ஆடல் அரசி
பத்மினியார் மயில் நாண ஆடும் போது
கட கடவென்றே ஒரு நடை நடந்தீர்...அடடா!...
நாட்டியத்தை நான் மறந்தேன். உம் பாதங்களில் தான் பறந்தேன்.
நடை வெள்ளம் கொண்டே நாட்டியத்தை அடித்தீர்...
படித்து வந்தேன் உந்தன் படங்கள் பார்த்தே வாழ்க்கையிலே மாந்தர்களின் பன்முகங்கள் படித்து வந்தேன்....
ஐயாதுடித்து நின்றேன் உம் படத்து வரிசை நின்று
டிக்கெட் விற்றுத் தீர்ந்த போதும்...
நம் நடிப்பின் இமயம் விண்ணில் சேர்ந்த போதும்!
ஆழ்வாராய் வந்து நின்று தவத் தமிழை ஆண்டீர்...
'திருமால் பெருமை' திரைப் படத்தில் நீர் குவித்த கரத்தில்
சிக்கி நின்றேன் நெக்குருகி 'ஜீவ தீபம்' கண்டேன்.
வயது பன்னிரண்டில் இப்பாலகனும் பக்தி ஆழ்வாரானேன்!
'சுருக்க' வலை சூழ்ந்திருந்த முதிர் முகம்தனிலே
விரிஞான ஒளி சுமந்து திரு அருளை அப்புகின்றீர்...
அந்தநாவுக்கு அரசரெனும் 'அப்பர்' கதாபாத்திரத்தில்...
திலகமேநீர் வந்து நின்றீர்...
அடியேன் 'அப்பூதி அடிகள்' ஆனேன்!
- யாழ் சுதாகர்
---------------------------------------------------------
எங்கள் தலைவன் புகழ் மாறாது!!
சிவாஜி பிறந்தநாள்!!
அழகின் இலக்கணம் மலர்வனம்!
அறிவின் இலக்கணம் அடக்கம்.
பரிவின் இலக்கணம் வீரபத்ரன்.
பணிவின் இலக்கணம் எஸ்பிபி.
நட்பின் இலக்கணம் உதயா.
பண்பின் இலக்கணம் ராம்கி.
உண்மையின் இலக்கணம் பாபா.
உடன்பிறப்பின் இலக்கணம் திருமுருகன்.
பொன்மனதின் இலக்கணம் எம்ஜிஆர் .
என்றும் நடிப்பின் இலக்கணம் சிவாஜி!!
இரவின் இலக்கியம் நிலவு.
நிலவின் இலக்கியம் பௌர்ணமி.
குரலின் இலக்கியம் அப்துல் ஹமீது.
குயிலின் இலக்கியம் பி. சுசீலா.
கர்நாடக இசையின் இலக்கியம்
எம்.எஸ். சுப்புலட்சுமி.
இன்றைய இலக்கியம் சுதா ரகுநாதன்.
ஈர்ப்புத் தமிழின் இலக்கியம் கே.எஸ். ராஜா.
பல்சுவைகளின் இலக்கியம் தமிழ்வாணன்.
இரக்கத்தின் இலக்கியம் அன்னை தெரசா.
ஈடற்ற நடிப்பின் இலக்கியம் சிவாஜி!!
இறைவனின் உறைவிடம் கோயில்.
இன்பத்தின் உறைவிடம் உள்ளம்.
தமிழின் உறைவிடம் புலவர்கள்.
தங்கத்தின் உறைவிடம் பெண்கள்.
இனிப்பின் உறைவிடம் முக்கனி.
நவரசங்களின் உறைவிடம் நடிகர் திலகம்!!
வெள்ளை மனதில் இவர் ஒரு குழயதை.
ரசிகரை கொள்ளையடிப்பதில் இவர் ஒரு திருடன்.
அள்ளிடக் குறையாத உன்னத நடிப்பில்
அன்றும் இன்றும் என்றும் இவரே ராஜா.
இலங்கை வானொலிக்கு ஒரு மயில்வாகனன்.
உலக நடிப்பிற்கு ஒரு மூஷிக வாகனன் (கணேசன்)
கடைசி தமிழன் உள்ளவரைக்கும்
கவிதை தென்றலாய் இவர் புகழ் நிலைக்கும்.
நம் கலைப்பசி தீர்க்க ஐப்பசி-1ல் உதயமானார்.
காலங்கள் மாறினாலும்
எங்கள் தலைவன் புகழ் மாறாது!!!
- யாழ் சுதாகர்
yazhsudhakar@gmail.com ph- 9840419112
'நினைத்தாலே இனிக்கும்' யாழ் சுதாகர்,'இனிய இரவு' அருண் இருவரின் சன் நியூஸ் பேட்டி.[Telecasted on 30-09-2007] [NEW]