Monday, October 1, 2007

'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன் போட்டோ ஆல்பம்-3

நடிகர் திலகத்தின் 80 வது பிறந்த நாளை முன்னிட்டு 'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன் நடித்த படங்களிலிருந்து...அந்த நாள் நினைவுகளில் ஊஞ்சல் கட்டும்.... கவித்துவமும், கலைநயமும் மிளிரும் புகைப்படங்களைத் தொகுத்துத் தந்திருக்கிறேன்.

சிவாஜி போட்டோ ஆல்பத்தைப் பார்க்க இங்கே அழுத்துங்கள்.

[நடிகர் திலகத்தின் போட்டோ ஆல்பம்... மேலும் தொடரும்.]

LINK

RADIO PROGRAMMES OF YAZH SUDHAKAR


நடிகர் திலகத்தின் போட்டோ ஆல்பம்-2நடிகர் திலகத்தின் 80 வது பிறந்த நாளை முன்னிட்டு 'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன் நடித்த படங்களிலிருந்து...அந்த நாள் நினைவுகளில் ஊஞ்சல் கட்டும்.... கவித்துவமும், கலைநயமும் மிளிரும் புகைப்படங்களைத் தொகுத்துத் தந்திருக்கிறேன்.

சிவாஜி போட்டோ ஆல்பத்தைப் பார்க்க இங்கே அழுத்துங்கள்.[PART-2]

[நடிகர் திலகத்தின் போட்டோ ஆல்பம்... மேலும் தொடரும்.]

Sunday, September 30, 2007

நடிகர் திலகத்தின் போட்டோ ஆல்பம்-1


நடிகர் திலகத்தின் 80 வது பிறந்த நாளை முன்னிட்டு 'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன் நடித்த படங்களிலிருந்து...அந்த நாள் நினைவுகளில் ஊஞ்சல் கட்டும்.... கவித்துவமும், கலைநயமும் மிளிரும் புகைப்படங்களைத் தொகுத்துத் தந்திருக்கிறேன்.

[நடிகர் திலகத்தின் போட்டோ ஆல்பம்... மேலும் தொடரும்.]

Monday, August 20, 2007

நீர் அணிந்த ஆடை கூட நடிக்கும்!..
நீர் அணிந்த ஆடை கூட நடிக்கும்!..

உமைத்தொட்ட காற்றும் பேசி நடிக்கும்.

உமை நோக்கி ஒளியுமிழும் விளக்கு நடிக்கும்.

நெற்றியாடும் சுருள் முடியும் மெல்ல நடிக்கும்.

கலைக்குரிசில் பாதம்பட்ட தரை நடிக்கும்.

திரையரங்கம் போர்த்திநிற்கும் கூரை நடிக்கும்.

கலா ரசிகன் அமர்ந்து ரசிக்கும் நாற்காலியின்

கால் நடிக்கும்,கை நடிக்கும்,திரையில் விழும்

இடைவேளை என்கின்ற எழுத்து நடிக்கும்.

அது முடிய ஒலிக்கின்ற மணியும் நடிக்கும்!


நரை தடவி நீர்வந்து நின்றபோது....

இருபதிலும் என் முடிகள் நரைக்கக் கண்டேன்....

உயிர்வரைபடங்கள் தமிழினில் நீர் வரைந்தபோது

இரை மறந்து திரையரங்கில் தமிழ் குடித்தேன்.

குறைகாண முடியா நிறை நடிப்பில்....

இந்தக்குவலயத்தில் உமைப்போல

எவர்தான் உண்டு ?...

'திருவிளையாடல்' திரைப் படத்தில் ஓர் சிலிர்ப்புக் காட்சி...

கம்பீரமும் அலட்சியமும் காலில் மின்ன...

கடற்கரையோரம் மிடுக்காக நெஞ்சுயர்த்தி...

நீர்திரை கிழிய நடை போட்ட காட்சி கண்டு

விரல் கிழிய விசிலடித்தேன்...வியந்து நின்றேன்!...


'கந்தன் கருணை' படத்தில் அந்த நடையைப் பார்த்து

என் கந்தர்மடம் வரும் வரைக்கும்

சொந்த நடை மறந்தேன் ஐயா...

'திருஅருட்செல்வர்' படத்தினிலே பெரும் ஆடல் அரசி

பத்மினியார் மயில் நாண ஆடும் போது

கட கடவென்றே ஒரு நடை நடந்தீர்...அடடா!...

நாட்டியத்தை நான் மறந்தேன். உம் பாதங்களில் தான் பறந்தேன்.

நடை வெள்ளம் கொண்டே நாட்டியத்தை அடித்தீர்...

படித்து வந்தேன் உந்தன் படங்கள் பார்த்தே வாழ்க்கையிலே மாந்தர்களின் பன்முகங்கள் படித்து வந்தேன்....

ஐயாதுடித்து நின்றேன் உம் படத்து வரிசை நின்று

டிக்கெட் விற்றுத் தீர்ந்த போதும்...

நம் நடிப்பின் இமயம் விண்ணில் சேர்ந்த போதும்!


ஆழ்வாராய் வந்து நின்று தவத் தமிழை ஆண்டீர்...

'திருமால் பெருமை' திரைப் படத்தில் நீர் குவித்த கரத்தில்

சிக்கி நின்றேன் நெக்குருகி 'ஜீவ தீபம்' கண்டேன்.

வயது பன்னிரண்டில் இப்பாலகனும் பக்தி ஆழ்வாரானேன்!

'சுருக்க' வலை சூழ்ந்திருந்த முதிர் முகம்தனிலே

விரிஞான ஒளி சுமந்து திரு அருளை அப்புகின்றீர்...

அந்தநாவுக்கு அரசரெனும் 'அப்பர்' கதாபாத்திரத்தில்...

திலகமேநீர் வந்து நின்றீர்...

அடியேன் 'அப்பூதி அடிகள்' ஆனேன்!


- யாழ் சுதாகர்

yazhsudhakar@gmail.com

ph- 9840419112

'நினைத்தாலே இனிக்கும்' யாழ் சுதாகர்,'இனிய இரவு' அருண் இருவரின் சன் நியூஸ் பேட்டி.[Telecasted on 30-09-2007] [NEW]


சிவாஜி பாடல்களில்.....ராகங்கள்...
1.கல்யாணி
மன்னவன் வந்தானடி ['திருவருட்செல்வர்']
சிந்தனை செய் மனமே...['அம்பிகாபதி']
2.சிந்து பைரவி
சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே...[திருவருட்செல்வர்']
என்னை யாரென்று எண்ணியெண்ணி நீ பார்க்கிறாய்...['பாலும் பழமும்] மணப்பாறை மாடு கட்டி...['மக்களைப் பெற்ற மகராசி']
3.முகாரி
வாடா மலரெ...தமிழ்த் தேனே..['அம்பிகாபதி'']
4.மலய மாருதம்
பெண்களை நம்பாதே...['தூக்குத் தூக்கி']
5.சண்முகப்பிரியா
பாட்டும் நானே...பாவமும் நானே...['திருவிளையாடல்']
நெஞ்சில் குடியிருக்கும்...['இரும்புத் திரை']
6.யமன் கலயாணி
இசை கேட்டால் புவி அசைந்தாடும்..['தவப் புதல்வன்']
கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா.. கிருஷ்ணா...['தெய்வ மகன்']
7.கரஹரப்பிரியா
முத்துக்களோ கண்கள்...['னெஞ்சிருக்கும் வரை']
பூங்காற்று திரும்புமா?...['முதல் மரியாதை']
மாதவிப் பொன்மயிலாள் தோகை விரித்தாள்...['இரு மலர்கள்']
8.வாசந்தி
அன்பு நடமாடும் கலைக் கூடமே...['அவன் தான் மனிதன்']
9.தர்மாவதி
அம்மானை...அழகு மிகு கண்மானை...['அவன் ஒரு சரித்திரம்']
10.மத்தியமாவதி
ஆகாயப் பந்தலிலே...['பொன்னூஞ்சல்']
வேலாலே விழிகள்...['என்னைப் போல் ஒருவன்']
சந்தனத்தில் னல்ல வாசமெடுத்து...['பிராப்தம்']
11.மாய மாளவ கௌளை
கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா?..['ஆலய மணி']
அந்தப்புரத்தில் ஧ரு மகராணி...['தீபம்']
12.சிவரஞ்சனி
நான் பேச நினைப்பதெல்லாம்...நீ பேச வேண்டும்...['பாலும் பழமும்']
13.ஆபேரி
சிந்து நதிக்கரை ஢ரம்...அந்தி நேரம்..['நல்லதொரு குடும்பம்']
14.பிருந்தாவன சாரங்கா
ஆயிரத்தில் ஧ருத்தியம்மா நீ...['கை கொடுத்த தெய்வம்']
பொன் ஧ன்று கண்டேன்...['படித்தால் மட்டும் போதுமா?']
15.அடானா
யார் தருவார் இந்த அரியாசனம்?...['மஹாகவி காளிதாஸ்']
16.சாருகேசி
வசந்த முல்லை போலே வந்து...['சாரங்கதாரா']
17.மோஹனம்
மோகனப் புன்னகை வீசிடும் ['வணங்காமுடி']
தேன் மல்லிப் பூவே...['தியாகம்']

LINKS

யாழ் சுதாகரின் குரல் பதிவுகள் [NEW]

வானொலி நேயர்கள் எழுதிய கடிதங்கள்

'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன் நினைவலைகள்

'மக்கள் திலகம்' எம்.ஜி.ஆர் நினைவலைகள்

கே.எஸ்.ராஜா நினைவலைகள்

'பாட்டுக்கு ஒரு தலைவர்' டி.எம்.சௌந்தர ராஜன்

'யாழ் சுதாகர்' காதல் கவிதைகள்....பகுதி1

'யாழ் சுதாகர்' காதல் கவிதைகள்....பகுதி2

'யாழ் சுதாகர்' தத்துவக் கவிதைகள்

'யாழ் சுதாகர்' போட்டோ ஆல்பம்-பகுதி1

'யாழ் சுதாகர்' போட்டோ ஆல்பம்-பகுதி2

யாழ் சுதாகரின் சிந்தனைகள்